அத்தியாயம் 81

இந்தப் பழைய சகாப்தம் எவ்வளவு பொல்லாதது மற்றும் ஒழுக்கக் கேடானது! நான் உன்னை விழுங்கிப் போடுவேன்! சீயோன் மலையே! என்னை வாழ்த்த எழுந்திரு! எனது நிர்வாகத் திட்டத்தை நிறைவு செய்ததற்காக, எனது மகத்தான கிரியையை வெற்றிகரமாக நிறைவேற்றியதற்காக, எழுந்து ஆரவாரம் செய்யாமல் இருக்கத் துணிபவன் யார்! மகிழ்ச்சியில் எழுந்து துள்ளிக் குதிக்காமல் இருக்கத் துணிபவன் யார்? அவர்கள் என்னுடைய கரத்தால் தங்கள் மரணங்களைச் சந்திப்பார்கள்! சிறிதளவு இரக்கமோ, கிருபையோ கட்டாமல், எல்லோர் மீதும் நான் நீதியைச் செயல்படுத்துவேன், நான் அதைக் கொஞ்சமும் பாரபட்சமின்றி செய்கிறேன். சகல ஜனங்களே! துதிக்க எழுந்திருங்கள், என்னை மகிமைப்படுத்துங்கள்! முடிவில்லாத மகிமை அனைத்தும், நித்திய நித்தியமாக, என்னாலேயே உள்ளது, மேலும் என்னால் ஸ்தாபிக்கப்பட்டது. மகிமையைத் தனக்கென எடுத்துக் கொள்ளத் துணிபவன் யார்? எனது மகிமையை ஒரு பொருளாகக் கருதுவதற்கு துணிபவன் யார்? அவர்கள் எனது கரத்தால் கொல்லப்படுவார்கள்! ஓ, கொடூரமான மனிதர்களே! நான் உங்களைச் சிருஷ்டித்தேன், உங்களைப் போஷித்தேன், நான் உங்களை இன்றுவரை வழிநடத்தி வருகிறேன், ஆனாலும் நீங்கள் என்னைப் பற்றிச் சிறிதும் அறியவில்லை, மேலும் நீங்கள் என்னை நேசிக்கவே இல்லை. உங்கள் மீது என்னால் எப்படி மீண்டும் இரக்கம் காட்ட முடியும்? நான் எப்படி உங்களை இரட்சிக்க முடியும்? நான் கடுங்கோபத்தோடு மட்டுமே உங்களிடம் நடந்து கொள்ள முடியும்! நான் உங்களுக்கு அழிவு மற்றும் நித்திய சிட்சை கொண்டு ஈடு செய்வேன். இது தான் நீதி; இது இப்படியாக மட்டுமே இருக்க முடியும்.

எனது ராஜ்யம் திடமானது மற்றும் நிலையானது; அது ஒருபோதும் வீழ்ச்சியடையாது. அது நித்தியத்திலும் நிலைத்திருக்கும்! எனது குமாரர்கள், எனது முதற்பேறான குமாரர்கள் மற்றும் எனது ஜனங்கள் என்னுடன் என்றென்றும் ஆசீர்வாதங்களை அனுபவிப்பார்கள்! ஆவிக்குரிய விஷயங்களைப் புரிந்து கொள்ளாதவர்கள் மற்றும் பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வெளிப்பாடுகள் கொடுக்கப்படாதவர்கள் வெகு விரைவில் எனது ராஜ்யத்திலிருந்து அகற்றப்படுவார்கள். அவர்கள் தங்கள் சொந்த விருப்பப்படி வெளியேற மாட்டார்கள், ஆனால் எனது இருப்புக்கோலின் ஆளுகையாலும், எனது மகத்துவத்தாலும் கட்டாயப்படுத்தப்பட்டு வெளியேற்றப்படுவார்கள்; மேலும், அவர்கள் என் காலால் உதைத்து வெளியேற்றப்படுவார்கள். ஒரு காலத்தில் பொல்லாத ஆவிகளால் ஆட்கொள்ளப்பட்டவர்கள் (அதாவது, பிறப்பிலிருந்து) அனைவரும் இப்போது வெளிப்படுத்தப்படுவார்கள். நான் உன்னைத் துரத்திவிடுவேன்! நான் சொன்னது உனக்கு இன்னும் நினைவிருக்கிறதா? நான்—பரிசுத்தமும் குற்றமுமற்ற தேவன்—அருவருப்பான மற்றும் அசுத்தமான தேவாலயத்தில் வாசம் செய்யமாட்டேன். பொல்லாத ஆவிகளால் ஆட்கொள்ளப்பட்டவர்களுக்கு இது தெரியும், நான் தெளிவுபடுத்த வேண்டியதில்லை. நான் உன்னை முன்குறிக்கவில்லை! நீ பழைய சாத்தான், ஆனாலும் நீ என் ராஜ்யத்தில் தந்திரமாக நுழைய விரும்புகிறாய்! நிச்சயமாக இல்லை! நான் உனக்குச் சொல்கிறேன்! இன்று நான் உனக்கு மிகத் தெளிவாகக் கூறுகிறேன்: மனுக்குலம் சிருஷ்டிக்கப்பட்ட நேரத்தில் நான் தெரிந்துகொண்டவர்களை, நான் எனது பண்பு மற்றும் எனது மனநிலையுடன் ஊக்குவித்துள்ளேன்; ஆகையால், இன்று அவர்கள் எனக்கு மட்டுமே விசுவாசமாக இருக்கிறார்கள், அவர்கள் திருச்சபைக்காகப் பாரத்தைச் சுமக்க முடியும், மேலும் அவர்கள் எனக்காகத் தங்களையே ஒப்புக் கொடுக்கவும், தங்கள் முழுவதையும் எனக்காகக் கொடுத்து விடவும் தயாராக உள்ளனர். நான் தெரிந்துகொள்ளாதவர்கள், சாத்தானால் குறிப்பிட்ட அளவிற்கு சீர்கேடு அடைந்துள்ளனர், மேலும் அவர்களிடம் எனது பண்பு மற்றும் எனது மனநிலை சிறிதும் இல்லை. என்னுடைய வார்த்தைகள் முரண்பாடானவை என்று நீங்கள் நினைக்கிறீர்கள், ஆனால், “நீங்கள் என்னாலே முன்குறிக்கப்பட்டு, தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிறீர்கள், ஆனாலும் உங்கள் செயல்களுக்கானப் பலன்களை நீங்கள் சுமப்பீர்கள்” என்ற வார்த்தைகள் அனைத்தும் சாத்தானைக் குறிக்கின்றன. இப்போது நான் ஒரு விஷயத்தை விளக்குகிறேன்: இன்று, எழுந்து திருச்சபைகளின் மீது அதிகாரம் எடுத்துக் கொள்ளக் கூடியவர்கள், திருச்சபைகளை மேய்ப்பவர்கள், எனது பாரத்தைக் கருத்தில் கொண்டு, சிறப்புப் பணிகளைச் நிறைவேற்றுவார்கள்—அந்த ஜனங்களில் ஒருவர் கூட கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்யவில்லை; அவர்கள் அனைவரும் நான் முன்குறித்து தெரிந்துகொண்டவர்கள். நீங்கள் அதிகம் கவலைப்படாமல் இருக்கவும், உங்கள் வாழ்க்கை முன்னேற்றத்தைத் தாமதப்படுத்தாமல் இருக்கவும், நான் இதை உங்களுக்குச் சொல்கிறேன். எத்தனை பேரால் முதற்பேறான குமாரன் என்ற அந்தஸ்தை வெல்ல முடியும்? பட்டம் கொடுக்கப்படுவது போல் இது அவ்வளவு சுலபமாக இருக்குமா? சாத்தியமற்றது! நான் உங்களைப் பரிபூரணப்படுத்தாதிருந்தால், நீங்கள் சாத்தானால் எப்பொழுதோ குறிப்பிட்ட அளவிற்கு சீர்கெடுக்கப்பட்டிருப்பீர்கள். அதனால் தான், என்னிடம் விசுவாசமாக இருப்பவர்களை நான் எப்போதும் கவனித்து, பாதுகாப்பேன், தீங்கு மற்றும் வேதனைகளிலிருந்து அவர்களைக் காப்பேன் என்பதை நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினேன். நான் முன்குறிக்காதவர்கள் பொல்லாத ஆவிகளால் ஆட்கொள்ளப்பட்டவர்கள்; அவர்கள் உணர்ச்சியற்றவர்கள், புத்தியில்லாதவர்கள் மற்றும் ஆவிக்குரிய வளர்ச்சியற்றவர்கள் மற்றும் திருச்சபைகளை வழிநடத்த முடியாதவர்கள் (அதாவது, உற்சாகமானவர்கள் ஆனால் தரிசனங்களைப் பற்றி தெளிவற்றவர்கள்). உன்னைப் பார்த்து நான் வெறுப்பும் கோபமும் அடையாதபடி நீ எனது பார்வையில் இருந்து எவ்வளவு சீக்கிரம் அகற்றப்படுகிறாயோ அவ்வளவு நல்லது. நீ சீக்கிரம் விலகினால், நீ குறைவான சிட்சையைப் பெறுவாய்—ஆனால் நீ எவ்வளவு தாமதிக்கிறாயோ, அவ்வளவு கடுமையான சிட்சையைப் பெறுவாய். உனக்குப் புரிகிறதா? வெட்கக் கேடாக செயல்படுவதை நிறுத்து! நீ சீர்கெட்டவனாகவும், கட்டுப்பாடற்றவனாகவும், சிந்தனையற்றவனாகவும், கவனக்குறைவாகவும் இருக்கிறாய், மேலும் நீ எந்த மாதிரியான குப்பை என்று உனக்குத் தெரியவில்லை! நீ குருடனாக இருக்கிறாய்!

என் ராஜ்யத்தில் அதிகாரமுள்ளவர்கள் அனைவரும் என்னால் கவனமாகத் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் மற்றும் மீண்டும் மீண்டும் புடமிடப்பட்டவர்கள்; அவர்களை யாராலும் தோற்கடிக்க முடியாது. நான் அவர்களுக்குப் பலத்தைக் கொடுத்திருக்கிறேன், அதனால் அவர்கள் ஒருபோதும் வீழ்ச்சியடைந்தோ அல்லது வழுவியோ போகமாட்டார்கள். அவர்கள் எனது அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறார்கள். இந்நாளில் இருந்து, நயவஞ்சகர்கள் தங்கள் உண்மையான தன்மையை வெளிப்படுத்துவார்கள். அவர்கள் எல்லா வகையான வெட்கக் கேடான காரியங்களையும் செய்யக் கூடியவர்கள், ஆனால் இறுதியில், சாத்தானைச் சிட்சித்து எரித்துச் சாம்பலாக்கும் எனது கரத்திலிருந்து அவர்கள் தப்ப மாட்டார்கள். எனது ஆலயம் பரிசுத்தமாகவும் மாசற்றதாகவும் இருக்கும். இவை அனைத்தும் எனக்குச் சாட்சியாகவும், என்னை வெளிப்படுத்துவதாகவும், எனது நாமத்திற்கு மகிமையாகவும் உள்ளன. எனது ஆலயம் நான் நித்தியமாகத் தங்குமிடம் மற்றும் என் நித்திய அன்பின் பொருள்; நான் அடிக்கடி அதை அன்பின் கரத்தால் அரவணைத்து, அன்பின் மொழியால் அதற்கு ஆறுதல் தருகிறேன், அன்பின் கண்களால் அதைப் பராமரித்து, பொல்லாதவர்களின் பொறிகளில் சிக்காமல் அல்லது சாத்தானால் வஞ்சிக்கப்படாமல் இருக்க, அதை அன்பின் அரவணைப்பில் தழுவுகிறேன். இன்று, எனக்காக ஊழியம் செய்பவர்கள், ஆனால் இரட்சிக்கப்படாதவர்கள் கடைசியாக ஒருமுறை என்னால் பயன்படுத்தப்படுவார்கள். இவற்றை என் ராஜ்யத்திலிருந்து நீக்க நான் ஏன் அவசரப்படுகிறேன்? நான் ஏன் அவற்றை என் பார்வையிலிருந்து அகற்ற வேண்டும்? நான் அவர்களை அடியோடு வெறுக்கிறேன்! நான் ஏன் அவர்களை இரட்சிக்கவில்லை? நான் ஏன் அவர்களை இப்படி வெறுத்து ஒதுக்குகிறேன்? நான் ஏன் அவர்களைக் கொல்ல வேண்டும்? நான் ஏன் அவர்களை அழிக்க வேண்டும்? (அவர்களின் சாம்பல் உட்பட, அவர்களின் ஒரு சின்ன விஷயம் கூட எனது பார்வையில் இருக்கக்கூடாது.) ஏன்? சிவப்பான பெரிய வலுசர்ப்பம், பழங்கால சர்ப்பம், மற்றும் பழைய சாத்தான் ஆகியவைக் கூட எனது ராஜ்யத்தில் ஈட்டாத வாழ்வாதாரத்தைத் தேடுகின்றன! இனி கற்பனை செய்ய வேண்டாம்! இவை அனைத்தும் ஒன்றுமில்லாமல் ஆகிச் சாம்பலாகிவிடும்!

நான் இந்தக் காலத்தை அழிப்பேன், அதை என் ராஜ்யமாக மாற்றுவேன், மேலும் நான் நேசிக்கும் ஜனங்களுடன் நித்திய காலமாக வாழ்ந்து மகிழ்ச்சியுறுவேன். அந்த அசுத்தமான காரியங்கள் எனது ராஜ்யத்தில் இருக்கலாம் என்று நினைக்கக் கூடாது. நீங்கள் இந்தக் குழப்பமான சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நினைக்கிறீர்களா? அத்தகைய கற்பனையான விஷயங்களை மறந்து விடுங்கள்! என் கண்கள் அனைத்தையும் பார்க்கின்றன என்பது உங்களுக்குத் தெரியாது! எல்லாம் எனது கரத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது உங்களுக்குத் தெரியாது! நீங்கள் மிகவும் மதிப்பிற்குரியவர்கள் என்று நினைக்க வேண்டாம்! நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்குரிய சரியான இடத்தில் இருக்க வேண்டும். தாழ்மையுள்ளவர்களாக (ஆசீர்வதிக்கப்பட்டவர்களை நான் குறிப்பிடுகிறேன்) நடிக்க வேண்டாம் அல்லது நடுங்கவோ மற்றும் பயப்படவோ (நான் சாபத்தை அனுபவிப்பவர்களைக் குறிப்பிடுகிறேன்) வேண்டாம். இப்போது, ஜனங்கள் அனைவரும் தங்கள் இருதயங்களுக்குள் தங்களைத் தாங்களே புரிந்து கொள்ள வேண்டும். நான் உங்கள் பெயரைக் குறிப்பிடாவிட்டாலும், நீங்கள் இன்னும் உறுதியாக உணர வேண்டும், ஏனென்றால் நான் எனது வார்த்தைகளை ஒவ்வொருவருக்கு நேராகவும் அனுப்பி இருக்கிறேன். நீங்கள் என்னால் தெரிந்து கொள்ளப்பட்டிருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி, எனது வார்த்தைகள் உங்களின் அனைத்து தற்போதைய நிலைகளுக்கு நேராகவும் இருக்கிறது. அதாவது, நான் தெரிந்து கொண்டவர்களில் நீங்கள் இருந்தால், நீங்கள் உங்களை எவ்வாறு முன்வைத்தீர்கள் என்பதன் அடிப்படையில் நான் தெரிந்து கொண்டவர்களின் நிலையைப் பற்றி நான் பேசுகிறேன்; என்னால் தெரிந்து கொள்ளப்படாதவர்களைப் பொறுத்தவரை, நான் அவர்களின் நிலைகளுக்கு ஏற்பவும் பேசுகிறேன். எனவே, எனது வார்த்தைகள் ஒரு குறிப்பிட்ட அளவிற்குப் பேசப்பட்டுள்ளன; நீங்கள் ஒவ்வொருவரும் அதைக் குறித்து நல்ல உணர்வுடன் இருக்க வேண்டும். உங்களை நீங்களே வஞ்சித்துக் கொள்ளாதீர்கள்! பயப்படாதிருங்கள்! மிகக்குறைவான எண்ணிக்கை ஆட்களே இருப்பதால், வஞ்சிக்க முடியாது! தெரிந்து கொள்ளப்பட்டவன் என்று நான் சொல்கிறவன் தெரிந்து கொள்ளப்பட்டவன், நடிப்பதில் நீ எவ்வளவு சிறந்தவனாக இருந்தாலும் சரி, எனது தரம் இல்லையென்றால் நீ தோல்வியடைவாய். நான் எனது வார்த்தையை நிறைவேற்றுவதால், எனது சொந்தத் திட்டங்களுக்கு நான் சாதாரணமாகச் சீர்குலைப்பதில்லை; நான் செய்வது எல்லாம் சரியானது என்பதால், நான் செய்ய விரும்புவதையெல்லாம் நான் செய்கிறேன். நான் உன்னதமானவன், நான் ஒன்றானவன். இதில் நீ தெளிவாக இருக்கிறாயா? உனக்குப் புரிகிறதா?

இப்போது, எனது வார்த்தைகளைப் படித்த பிறகு, பொல்லாதவைகளைச் செய்பவர்களும், மாறுபாடுள்ளவர்களும், வஞ்சகர்களும், முன்னேற்றத்தை அடையவும், தங்கள் சொந்த முயற்சிகளைச் செய்யவும் கடுமையாக உழைக்கின்றனர். அவர்கள் எனது ராஜ்யத்திற்குள் நுழைவதற்கு ஒரு சிறிய விலைக்கிரயத்தை மட்டுமே செலுத்த விரும்புகிறார்கள். அத்தகைய எண்ணங்களை அவர்கள் கைவிட வேண்டும்! (இந்த ஜனங்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை, ஏனென்றால் நான் அவர்களுக்கு மனந்திரும்புவதற்கான வாய்ப்பை வழங்கவில்லை.) நான் எனது ராஜ்யத்தின் வாசலைக் காக்கிறேன். ஜனங்கள் தங்கள் விருப்பப்படி எனது ராஜ்யத்தில் நுழைய முடியும் என்று நீ நம்புகிறாயா? எனது ராஜ்யம் எல்லா வகையான வேண்டாதவைகளையும் ஏற்றுக்கொள்ளும் என்று நீ நம்புகிறாயா? எனது ராஜ்யம் எல்லா விதமான மதிப்பற்ற குப்பைகளையும் ஏற்றுக் கொள்ளுமா? நீ தவறாக நினைத்திருக்கிறாய்! இன்று, இராஜ்ஜியத்தில் இருப்பவர்கள் என்னுடன் ராஜரீக அதிகாரத்தைக் கொண்டிருப்பவர்கள் ஆவர்; நான் அவர்களைக் கவனமாகப் பண்படுத்தியுள்ளேன். இது வெறும் விருப்பத்தால் அடையக் கூடிய ஒன்றல்ல; நீங்கள் எனது அங்கீகாரத்தைப் பெற வேண்டும். மேலும், இது யாருடனும் விவாதிக்கப்படும் விஷயமல்ல; இது நானே ஏற்பாடு செய்த ஒன்று. நான் சொல்வதே நடக்கும். நான் நேசிப்பவர்களுக்கு எனது இரகசியங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. பொல்லாப்பு செய்பவர்கள்—அதாவது, நான் தெரிந்து கொள்ளாதவர்கள்—அவற்றைப் பெறுவதற்கு தகுதியற்றவர்கள். இந்த இரகசியங்களை அவர்கள் கேட்டாலும், அவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள், ஏனென்றால் சாத்தான் அவர்களின் கண்களை மறைத்து, அவர்களின் இருதயங்களைப் பிடித்து, அவர்களை முழுவதுமாய் அழித்துவிட்டான். எனது செயல்கள் ஆச்சரியமானவை மற்றும் ஞானமானவை என்றும், எனது ஊழியத்தில் நான் அனைத்தையும் கூட்டிச் சேர்க்கிறேன் என்றும் ஏன் கூறப்படுகிறது? என்னால் முன்குறிக்கப்பட்டு, தெரிந்து கொள்ளப்படாதவர்களைத் தண்டிக்கவும், சீர்கெடுக்கவும், நான் அவர்களைச் சாத்தானிடம் ஒப்படைப்பேன், மேலும் அவர்களுக்குத் தண்டனைக் கொடுப்பதை எனது கரத்தில் எடுக்கமாட்டேன்; நான் இப்படிப்பட்ட ஞானமுள்ளவன்! இதைப் பற்றி எப்போதாவது யோசித்தவர் யார்? எந்த முயற்சியும் சிறிதளவும் இல்லாமலேயே, என்னுடைய மகத்தான கிரியை நிறைவேறிவிட்டது, இல்லையா?

முந்தைய:  அத்தியாயம் 80

அடுத்த:  அத்தியாயம் 82

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக

Connect with us on Messenger