அனுபவம் பற்றியவை

பேதுரு நூற்றுக்கணக்கான உபத்திரவங்களைத் தன்னுடைய அனுபவங்கள் முழுவதிலும் சந்தித்தான். இன்றைய ஜனங்கள் “உபத்திரவம்” என்னும் சொல்லைத் தெரிந்திருந்தும், அவர்கள் அதனுடைய உண்மையான அர்த்தத்தையும் சூழ்நிலைகளையும் குறித்து குழப்பமடைந்திருக்கிறார்கள். தேவன் ஜனங்களுடைய தீர்மானத்தைப் பக்குவப்படுத்துகிறார், அவர்களுடைய நம்பிக்கையைச் சுத்திகரிக்கிறார், மற்றும் அவர்களுடைய ஒவ்வொரு பாகத்தையும் பரிபூரணப்படுத்துகிறார், மேலும் இவை உபத்திரவங்களின் மூலமாக அடையப்படுகின்றன, மேலும் இவை பரிசுத்த ஆவியானவரின் மறைவான கிரியையுமாய் இருக்கின்றன. தேவன் ஜனங்களைக் கைவிட்டதைப் போல் இது தோன்றுகிறது, மேலும் அவர்கள் ஜாக்கிரதையாக இராவிட்டால், அவர்கள் இந்தச் உபத்திரவங்களையெல்லாம் சாத்தானின் உபத்திரவங்களாகக் காண்பார்கள். மெய்யாகவே, அநேக உபத்திரவங்களைச் சோதனைகளாக கருத்தில் கொள்ளலாம், இந்தக் கொள்கை மற்றும் விதிமுறையின் படியே தேவன் கிரியை செய்கிறார். தேவனுடைய சமுகத்தில் ஜனங்கள் உண்மையாகவே வாழ்ந்தால், அத்தகைய விஷயங்களை அவர்கள் தேவனிடத்திலிருந்து வந்த உபத்திரவங்கள் என்று கருதுவார்கள், மேலும் அவற்றை நழுவவிடமாட்டார்கள். தேவன் தங்களுடன் இருப்பதால் சாத்தான் நிச்சயமாகத் தங்களை அணுகமாட்டான் என்று யாரவது சொன்னால், அது முழுமையாகச் சரியல்ல; அப்படியாக இருந்தால், இயேசு வனாந்திரத்தில் நாற்பது நாட்கள் உபவாசமாயிருந்த பின்பு அவர் சோதனைகளை எதிர்கொண்டதை எப்படி விளக்க முடியும்? ஆகவே, ஜனங்கள் தேவன் மேல் இருக்கும் தங்கள் விசுவாசம் குறித்த கருத்துக்களை உண்மையாகவே சரிசெய்தால் அவர்கள் பல காரியங்களை மிகத் தெளிவாகப் பார்ப்பார்கள் மற்றும் அவர்களுடைய புரிதல் வழிவிலகியதாகவும் தவறானதாகவும் இருக்காது. யாரவது தேவனால் பரிபூரணமாக்கப்பட உண்மையிலேயே உறுதியாயிருந்தால், அவர்கள் அணுகும் எல்லா விஷயங்களையும் பல கோணங்களில் எதிர்கொள்ள வேண்டும், இடது அல்லது வலதுபுறம் விலகக் கூடாது. தேவனுடைய கிரியையைப் பற்றிய அறிவு உனக்கு இல்லையென்றால் நீ தேவனோடு எப்படி ஒத்துழைக்க வேண்டும் என்று அறியமாட்டாய். தேவனுடைய கிரியையைப் பற்றி கொள்கைகளை நீ அறியாமல் இருந்து மற்றும் சாத்தான் எப்படி மனுஷனில் கிரியை செய்வான் என்பதைத் தெரியாமல் இருந்தால், நீ கைக்கொண்டு நடப்பதற்கு எந்தப் பாதையும் இருக்காது. வைராக்கியமான நாட்டம் மட்டுமே தேவனால் கேட்கப்பட்ட முடிவுகளை அடைய உன்னை அனுமதிக்காது. இதுபோன்ற அனுபவத்தின் வழி லாரன்ஸுடன் ஒத்திருக்கிறது: ஏதாகிலும் வித்தியாசத்தைச் செய்யாமல், அனுபவத்தின் மேல் மட்டுமே கவனம் செலுத்தி, சாத்தானின் கிரியை என்ன, பரிசுத்த ஆவியானவரின் கிரியை என்ன, தேவனுடைய பிரசன்னம் இல்லாமல் மனுஷனுடைய நிலை என்ன, மற்றும் எந்த வகையான ஜனங்களைத் தேவன் பரிபூரணப்படுத்த விரும்புகிறார் என்பதை முற்றிலும் அறியாமல் இருக்கிறார்கள். வேறுபட்ட ஜனங்ககளைக் கையாழும்போது எந்த கொள்கைகளைக் கடைபிடிக்க வேண்டும், தற்காலத்தில் தேவனுடைய சித்தத்தை எவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும், தேவனுடைய மனநிலையை எப்படி அறிய வேண்டும், மேலும் தேவனுடைய இரக்கம், மகத்துவம், நீதி எந்த ஜனங்கள் மேல், சூழ்நிலைகளில், மற்றும் காலத்தில் இயங்கும் என்பதைப் பற்றி அவனுக்கு எந்தப் பகுத்தறிவும் இல்லை. ஜனங்கள் தங்களுடைய அனுபவங்களுக்கு ஓர் அஸ்திபாரமாக பன்மடங்கான தரிசனங்களைக் கொண்டிருக்கவில்லையென்றால், பிறகு வாழ்க்கை கேள்விக்குறியாக இருக்கிறது, மேலும் அதே அனுபவத்தையே இன்னும் அதிகமாக அனுபவிக்கிறார்கள்; அவர்கள் கீழ்ப்படிந்து எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு முட்டாள்தனமாகத் தொடரலாம். இத்தகைய ஜனங்களை பரிபூரணப்படுத்துவது மிகவும் கடினம். மேலே சொல்லப்பட்ட எந்தத் தரிசனங்களும் உன்னிடம் இல்லையென்றால், நீ ஒரு மதிகெட்டவன் என்பதற்கும் நீ இஸ்ரவேலில் எப்போதும் நிற்கும் உப்பு தூணைப் போல் இருக்கிறாய் என்பதற்கும் இதுவே போதிய ஆதாரம் என்று கூறலாம். இதைப்போன்ற ஜனங்கள் உபயோகமற்றவர்கள், ஒன்றுக்கும் உதவாதவர்கள்! சில ஜனங்கள் எப்போதும் கண்மூடித்தனமாக மட்டுமே கீழ்ப்படிகிறார்கள், அவர்களுக்குத் தங்களை எப்போதும் தெரியும், புதிய விஷயங்களைக் கையாளும்போது தங்களை நடத்துவதற்கு அவர்களின் சுய வழிகளை உபயோகிக்கிறார்கள் அல்லது குறிப்பிடுவதற்குத் தகுதியற்ற அற்பமான விஷயங்களைக் கையாளுவதற்கு “ஞானத்தை” உபயோகிக்கிறார்கள். இதைப்போன்ற ஜனங்கள் பகுத்தறிவில்லாதவர்கள், கொடுமைப்படுத்தப்படுவதற்கு தங்களைக் கைவிடுவது அவர்களின் சுபாவமாயிருக்கிறது, மேலும் அவர்கள் எப்போதும் அப்படியே இருக்கிறார்கள்; அவர்கள் ஒருபோதும் மாறமாட்டார்கள். இதுபோன்ற ஜனங்கள் சிறிதளவு பகுத்தறிவு கூட இல்லாத முட்டாள்களாக இருக்கிறார்கள். சூழ்நிலைகளுக்கு அல்லது வேறுபட்ட ஜனங்களுக்கு ஏற்ப நடவடிக்கைகளை எடுக்க அவர்கள் என்றுமே முயற்சி செய்வதில்லை. இத்தகைய ஜனங்களுக்கு அனுபவம் இல்லை. நான் சில ஜனங்களைப் பார்த்திருக்கிறேன், இவர்கள் தங்களுடைய அறிவுக்குள் கட்டுண்டிருக்கிறார்கள், பொல்லாத ஆவிகளின் கிரியையால் ஆட்கொள்ளப்பட்டிருக்கிற ஜனங்களை எதிர்கொள்ளும்போது, எழுந்து நின்று அவர்களைக் கடிந்துகொள்ளத் துணியாமல் அவர்கள் தங்களுடைய தலைகளைத் தாழ்த்தி தங்கள் பாவங்களை அறிக்கையிடுகிறார்கள். பரிசுத்த ஆவியானவரின் தெளிவான கிரியையை எதிர்கொள்ளும்போது, அவர்கள் கீழ்ப்படிவதற்குத் துணிவதில்லை. பொல்லாத ஆவிகளும் தேவனுடைய கரங்களில் இருக்கின்றன என்று அவர்கள் நம்புகிறார்கள், மேலும் எழுந்து நின்று அதை எதிர்ப்பதற்கு சிறிதளவு கூட தைரியம் இல்லாமல் இருக்கிறார்கள். இதுபோன்ற ஜனங்கள் தேவனுக்கு அவமானத்தைத் தருகிறார்கள், மேலும் கனமான ஒரு சுமையை அவருக்காகத் தாங்குவதற்கு முற்றிலும் இயலாதவர்களாக இருக்கிறார்கள். இதைப்போன்ற மூடர்கள் எந்த விதமான வித்தியாசத்தையும் ஏற்படுத்துவதில்லை. ஆகையால், இது போன்ற அனுபவத்தின் வழியை நீக்க வேண்டும் ஏனென்றால் தேவனுடைய கண்களுக்கு அது ஏற்றுக்கொள்ளத்தகாததாக இருக்கிறது.

தேவன் மெய்யாகவே ஜனங்களுக்குள் அநேக கிரியைகளைச் செய்கிறார், சில வேளைகளில் அவர்களை பரீட்சித்துப் பார்க்கிறார், சில நேரங்களில் அவர்களைப் பக்குவப்படுத்துவதற்காக சூழல்களை உருவாக்குகிறார், சில நேரங்களில் வார்த்தைகளைப் பேசுவதன் மூலம் அவர்களை வழிநடத்துகிறார் மற்றும் அவர்களின் குறைபாடுகளைச் சீர்படுத்துகிறார். சில நேரங்களில் ஜனங்களுக்குக் குறைபாடாயிருக்கிற பல விஷயங்களைத் தங்களை அறியாமலே கண்டறிய தேவனால் ஆயத்தமாக்கப்பட்ட சூழல்களுக்குள் அவர்களைப் பரிசுத்த ஆவியானவர் நடத்துகிறார். ஜனங்கள் என்ன கூறுகிறார்கள் மற்றும் செய்கிறார்கள் என்பதன் மூலம், ஜனங்கள் பிறரை நடத்தும் மற்றும் விஷயங்களைக் கையாளும் விதம், அவர்கள் அறியாமலேயே பரிசுத்த ஆவியானவர் அவர்கள் முன்பு புரிந்திராத அநேக காரியங்களை அவர்களுக்குத் தெளிவுபடுத்துகிறார், மேலும் அநேக விஷயங்களையும், ஜனங்களையும் இன்னும் தெளிவாகக் காண அனுமதிக்கிறார், அவர்கள் முன்பு அறிந்திராத மிகுதியானவற்றைக் காணவும் அவர்களை அனுமதிக்கிறார். நீ உலகத்தோடு ஈடுபடும்போது, நீ படிப்படியாக உலகத்தின் காரியங்களை அறிந்துகொள்ள ஆரம்பிப்பாய் மற்றும் நீ உன்னுடைய முடிவைச் சந்திக்கும் முன், “ஒரு மனுஷனாக இருப்பது என்பது மெய்யாகவே கடினம்” என்று முடிவு செய்யக் கூடும். தேவனுக்கு முன்பாகச் சிறிது நேரத்தை அனுபவிக்க நீ செலவிட்டு, தேவனுடைய கிரியையை மற்றும் அவருடைய மனநிலையைப் புரிந்துகொள்வாயானால், நீ உணராமலேயே அதிகமான நுண்ணறிவைப் பெறுவாய் மற்றும் உன் வளர்ச்சி படிப்படியாக உயரும். நீ அநேக ஆவிக்குரிய காரியங்களை மிக நன்றாகப் புரிந்துகொள்வாய் மற்றும் நீ குறிப்பாக தேவனுடைய கிரியையைப் பற்றி இன்னும் தெளிவாக இருப்பாய். நீ தேவனுடைய வார்த்தைகள், தேவனுடைய கிரியை, தேவனுடைய ஒவ்வொரு செயல், தேவனுடைய மனநிலை, மேலும் தேவன் என்னவாக இருக்கிறார் மற்றும் என்ன கொண்டிருக்கிறார் என்பதையெல்லாம் உன் சொந்த வாழ்க்கையாக ஏற்றுக்கொள்வாய். நீ செய்வதெல்லாமே உலகில் அலைந்து திரிவதாக மட்டுமே இருந்தால், உன் சிறகுகள் என்றும் கடினமாக வளரும், மற்றும் தேவனுக்கு விரோதமான உன் எதிர்ப்பு என்றும் அதிகரிக்கும்; பின்னர் தேவன் உன்னை எப்படி பயன்படுத்த முடியும்? ஏனென்றால் உன்னில் “என் கருத்து” அதிகமாக இருப்பதால், தேவன் உன்னை பயன்படுத்துவதில்லை. நீ எவ்வளவு அதிகமாக தேவனுடைய சமுகத்தில் இருப்பாயோ அவ்வளவு அதிகமான அனுபவங்கள் உன்னிடத்தில் இருக்கும். நீ இன்னும் உலகில் ஒரு மிருகத்தைப் போல வாழ்கிறாய் என்றால்—உன் வாய் தேவனிடத்தில் விசுவாசமாக இருப்பதாகச் சொல்லிக்கொண்டு ஆனால் உன் இருதயம் வேறெங்கேயோ இருந்தால்—வாழ்வதற்காக உலகப் பிரகாரமான தத்துவங்களை நீ படித்தால், உன் முந்தின உழைப்புகள் அனைத்துமே ஒன்றுமில்லாமல் இருந்திருக்குமா? ஆதலால், தேவனுடைய சமுகத்தில் அந்த ஜனங்கள் எவ்வளவு அதிகமாக இருக்கிறார்களோ, அவ்வளவு எளிதாக அவர்கள் தேவனால் பரிபூரணப்படுத்தப்படுவார்கள். இதுதான் பரிசுத்த ஆவியானவர் தம்முடைய கிரியையைச் செய்யும் பாதையாகும். இதை நீ புரிந்துகொள்ளாவிட்டால், நீ சரியான பாதையில் பிரவேசிப்பது சாத்தியமில்லாமல் போகும், மேலும் தேவனாலே பரிபூரணப்படுத்தப்படுவதும் கேள்விக்குறியாக இருக்கும். உன்னால் சாதாரணமான ஆவிக்குரிய வாழ்க்கையைக் கொண்டிருக்க முடியாது; நீ ஊனமுற்றவனாக இருக்கிறதைப் போல அது இருக்கும், உன்னிடம் உன்னுடைய சுய கடின உழைப்பு மட்டும் தான் இருக்கும், தேவனுடைய கிரியை ஒன்றும் இருக்காது. இது உன் அனுபவத்தில் இருக்கும் ஒரு தவறல்லவா? நீ தேவனுடைய சமுகத்தில் இருப்பதற்கு கட்டாயமாக ஜெபிக்கவேண்டும் என்றில்லை; சில நேரங்களில் அது தேவனை பற்றிய உன்னுடைய சிந்தனையில் அல்லது அவருடைய கிரியையைப் பற்றி சிந்திப்பதில் இருக்கிறது, சில நேரங்களில் சில காரியங்களை கையாளுவதில், மற்றும் சில நேரங்களில் ஒரு நிகழ்வில் உன்னை வெளிப்படுத்துவதன் மூலம், நீ தேவனுடைய சமுகத்திற்குள் வருகிறாய். “நான் அடிக்கடி ஜெபிப்பதால் தேவனுடைய சமுகத்தில் நான் இல்லையா?” என்று பெரும்பாலான ஜனங்கள் கூறுகிறார்கள். அநேக ஜனங்கள் ஓயாமல் “தேவனுடைய சமுகத்தில்” ஜெபிக்கிறார்கள். ஜெபங்கள் அவர்களுடைய உதட்டில் எப்போதும் இருந்தாலும் அவர்கள் தேவனுடைய சமுகத்தில் உண்மையாகவே வாழ்வதில்லை. இத்தகைய ஜனங்கள் தேவனுடைய சமுகத்தில் தங்கள் நிலைமைகளைப் பராமரிக்கிறதற்கு ஒரே வழி இதுதான்; அவர்கள் எல்லா நேரங்களிலும் தேவனுடன் ஈடுபடுவதற்கு தங்கள் இருதயங்களை உபயோகிக்க முற்றிலும் இயலாது, மேலும் தேவனுக்கு முன்பாகத் தங்கள் அனுபவத்தின் வழியாகவோ, தியானிப்பதன் மூலமாகவோ, மெளனமாக சிந்திப்பதன் மூலமாகவோ, அல்லது தங்கள் இருதயங்களில் தேவனோடு ஈடுபடுவதற்குத் தங்களுடைய மனதை உபயோகப்படுத்துவதிலோ, தேவனுடைய பாரத்தைப் பற்றி கவனமாய் இருப்பதிலோ தேவனுக்கு முன்பாக வருவதற்கு இயலாது. அவர்கள் தங்களுடைய வாயினால் மட்டுமே பரலோகத்தில் இருக்கிற தேவனுக்கு ஜெபங்களை ஏறெடுக்கிறார்கள். அநேக ஜனங்களுடைய இருதயங்கள் தேவன் இல்லாமல் இருக்கின்றன, மேலும் அவர்கள் தேவனிடம் நெருங்கி வரும்போது மட்டுமே அவர் அங்கே இருக்கிறார்; பெரும்பாலான சமயங்களில், தேவன் அங்கே இருப்பதே இல்லை. ஒருவரின் இருதயத்தில் தேவன் இல்லை என்பதற்கான வெளிப்படுத்துதல் இது அல்லவா? மெய்யாகவே தேவன் அவர்களின் இருதயங்களில் இருந்தால், கொள்ளைக்காரரும் மிருகங்களும் செய்யும் காரியங்களை அவர்களால் செய்ய முடியுமா? தேவனை ஒருவர் உண்மையாகவே வணங்கினால், அவர்கள் தங்களுடைய உண்மையான இருதயத்தை தேவனுடன் தொடர்புக்கு கொண்டு வருவார்கள், மேலும் அவர்களுடைய எண்ணங்களும் கருத்துக்களும் தேவனுடைய வார்த்தைகளினால் நிறைந்திருக்கும். அவர்கள் பேச்சிலோ அல்லது செயலிலோ தவறு செய்யமாட்டார்கள், மேலும் வெளிப்படையாக தேவனை எதிர்க்கும் எதையும் செய்ய மாட்டார்கள். ஒரு விசுவாசியாக இருப்பதற்கான தகுதி இதுதான்.

முந்தைய:  ஒரு தகுந்த மேய்ப்பன் என்னவிதத்தில் ஆயத்தப்பட்டிருக்க வேண்டும்

அடுத்த:  புதிய காலத்திற்கான கட்டளைகள்

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக

Connect with us on Messenger