அத்தியாயம் 33

ஒரு காலத்தில் என் பரிசுத்த நாமத்தை உயர்த்தியவர்கள், பூமியின் மீதான என் மகிமை ஆகாயத்தை நிரப்புவதற்காக அயராது உழைத்தவர்கள் என் வீட்டில் இருந்தனர். இதன் காரணமாக, நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன், என் இருதயம் மகிழ்ச்சியால் நிரம்பியது—இருப்பினும், இரவும் பகலும் உறக்கத்தை விட்டுவிட்டு எனக்குப் பதிலாக யார் கிரியை செய்ய முடியும்? என் முன் ஒரு மனுஷனின் மனவுறுதியானது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது, ஆனால் அவனது கலகத்தனமோ என் கோபத்தைத் தூண்டுகிறது, இவ்வாறு, மனுஷன் தனது கடமையில் ஒருபோதும் நிலைத்திருக்க முடியாது என்பதால், அவன் மீதான என் துக்கம் அதிகமாகிறது. ஜனங்கள் ஏன் எப்போதும் எனக்குத் தங்களை அர்ப்பணிக்க இயலாதவர்களாய் இருக்கிறார்கள்? அவர்கள் ஏன் எப்போதும் என்னுடன் பேரம் பேச முயற்சிக்கிறார்கள்? நான் வர்த்தக மையத்தின் பொது மேலாளரா? ஜனங்கள் என்னிடம் கோருவதை நான் ஏன் முழு மனதுடன் நிறைவேற்றுகிறேன், ஆனாலும் மனுஷனிடம் நான் கேட்பது ஒன்றும் நடப்பதில்லை? வணிக வழிகளில் மனுஷன் தேர்ச்சி பெற்றவனாக இருந்து நான் தேர்ச்சி பெறவில்லை என்பதனால் இருக்குமோ? ஜனங்கள் ஏன் என்னை எப்போதும் சுமூகமான பேச்சு மற்றும் முகஸ்துதி மூலம் ஏமாற்றுகிறார்கள்? ஜனங்கள் எப்பொழுதும் “பரிசுகளைச்” சுமந்துகொண்டு வந்து, அதைத் திருப்பி மாற்று வழியில் ஏன் கேட்கிறார்கள்? இதைத்தான் நான் மனுஷனுக்குச் செய்யும்படி கற்றுக் கொடுத்திருக்கிறேனா? ஜனங்கள் ஏன் இத்தகைய விஷயங்களை விரைவாகவும் தெளிவாகவும் செய்கிறார்கள்? ஜனங்கள் ஏன் எப்போதும் என்னை ஏமாற்றத் தூண்டப்படுகிறார்கள்? நான் மனுஷன் மத்தியில் இருக்கும்போது, ஜனங்கள் என்னை ஒரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனாக நோக்கிப் பார்க்கிறார்கள்; நான் மூன்றாம் வானத்தில் இருக்கும்போது, அவர்கள் என்னை எல்லாவற்றின் மீதும் ஆளுகை செய்கிற, சர்வவல்லவராகக் கருதுகிறார்கள்; நான் ஆகாயத்தில் இருக்கும்போது, அவர்கள் என்னை எல்லாவற்றையும் நிரப்புகிற ஆவியானவராகப் பார்க்கிறார்கள். மொத்தத்தில், ஜனங்களின் இருதயங்களில் எனக்கென்று பொருத்தமான இடம் இல்லை. நான் அழைக்கப்படாத விருந்தாளியாக இருப்பது போல, ஜனங்கள் என்னை வெறுக்கிறார்கள், இதனால், நான் சீட்டை எடுத்துக்கொண்டு என் இருக்கையில் அமர்ந்தவுடன், அவர்கள் என்னைத் துரத்திவிட்டு, நான் இங்கே உட்காருவதற்கு எந்த இடமும் இல்லை என்றும், நான் தவறான இடத்திற்கு வந்திருக்கிறேன் என்றும் கூறுகிறார்கள், அதனால் நான் கோபமடைந்து வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை. மனுஷனுடன் இனி தொடர்புகொள்ள வேண்டாம் என்று நான் தீர்மானிக்கிறேன், ஏனென்றால் ஜனங்கள் மிகவும் குறுகிய மனம் கொண்டவர்கள், அவர்களின் பெருந்தன்மை மிகவும் அற்பமானது. நான் இனி அவர்கள் சாப்பிடும் அதே மேஜையில் சாப்பிடமாட்டேன், பூமியில் இனி அவர்களுடன் நேரத்தை செலவிட மாட்டேன். ஆனால் நான் பேசும்போது, ஜனங்கள் ஆச்சரியப்படுகிறார்கள்; நான் போய்விடுவேனோ என்று பயந்து, என்னைத் தடுத்து நிறுத்திக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் பாதிப்புகளைக் கண்டு, நான் உடனடியாக என் இருதயத்தில் சற்றே மனச்சோர்வுடனும் துக்கமாகவும் உணர்கிறேன். நான் அவர்களை விட்டுச் சென்றுவிடுவேன் என்று ஜனங்கள் பயப்படுகிறார்கள், இதனால் நான் அவர்களைப் பிரிந்தால், அழுகையின் சத்தம் உடனடியாக தேசத்தை நிரப்புகிறது, மேலும் ஜனங்களின் முகங்கள் கண்ணீரால் மூடப்படுகின்றன. நான் அவர்களின் கண்ணீரைத் துடைக்கிறேன், நான் அவர்களை மீண்டும் ஒரு முறை உயர்த்துகிறேன், அவர்கள் என்னை உற்றுநோக்குகிறார்கள், அவர்களின் கெஞ்சும் கண்கள் என்னைப் போக வேண்டாம் என்று கெஞ்சுவது போல் தெரிகிறது, அவர்களுடைய “நேர்மையின்” காரணமாக நான் அவர்களுடன் இருக்கிறேன். என் இருதயத்தில் உள்ள வேதனையை யாரால் புரிந்து கொள்ள முடியும்? பேச முடியாத என் விஷயங்களை யார் கவனத்தில் கொள்கிறார்கள்? ஜனங்களின் பார்வையில், நான் உணர்ச்சிகள் இல்லாமல் இருப்பது போலவும், எனவே நாம் எப்போதும் இரண்டு வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருந்திருக்கிறோம் என்பது போலவும் இருக்கிறது. என் இருதயத்திற்குள் உள்ள துக்க உணர்வை அவர்களால் எப்படிப் பார்க்க முடியும்? ஜனங்கள் தங்கள் சொந்த இன்பங்களை மட்டுமே இச்சிச்கிறார்கள், அவர்கள் என் சித்தத்தைப் பொருட்படுத்துவதில்லை, ஏனென்றால், இன்று வரை, எனது நிர்வாகத் திட்டத்தின் நோக்கம் குறித்து ஜனங்கள் அறியாமையிலேயே இருந்து வருகின்றனர், அதனால் இன்றும் அவர்கள் அமைதியாக வேண்டுதல் செய்கின்றனர்—இதனால் என்ன பலன் இருக்கிறது?

நான் மனுஷர்கள் மத்தியில் ஜீவிக்கும்போது, ஜனங்களின் இருதயங்களில் ஒரு குறிப்பிட்ட இடத்தைப் பிடிக்கிறேன்; நான் மாம்சத்தில் தோன்றியதாலும், ஜனங்கள் பழைய மாம்சத்தில் வாழ்வதாலும், அவர்கள் எப்போதும் என்னை மாம்சமானவராகவே கருதுகிறார்கள். மனுஷர்கள் மாம்சத்தை மட்டுமே கொண்டிருப்பதாலும், அதற்கு மேல் இணைப்புகள் இல்லாததாலும், “அவர்கள் கொண்டிருக்கிற அனைத்தையும்” எனக்குக் கொடுத்துள்ளனர். ஆயினும் அவர்களுக்கு ஒன்றும் தெரியாது; அவர்கள் வெறுமனே எனக்கு முன் “தங்கள் பக்தியை வழங்குகிறார்கள்”. நான் அறுவடை செய்வதோ ஒன்றுக்கும் உதவாத குப்பையாகத்தான் இருக்கிறது—ஆனாலும் ஜனங்கள் அவ்வாறு நினைப்பதில்லை. அவர்கள் கொடுத்திருக்கிற “பரிசுகளை” நான் என் பொருட்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, ஜனங்கள் உடனடியாக என் விலையேறப்பெற்ற தன்மையை அடையாளம் கண்டுகொள்கிறார்கள், அப்போதுதான் அவர்கள் என் அளவிட முடியாத தன்மையைப் பார்க்கிறார்கள். அவர்களின் துதியால் நான் பெருமிதம் கொள்வதில்லை, ஆனால் ஜனங்கள் அனைவரும் என்னை முழுமையாக அறிந்து கொள்வதற்காக மனிதனிடம் தொடர்ந்து தோன்றுகிறேன். நான் என்னை முழுமையாக அவர்களுக்குக் காட்டும்போது, உப்புத் தூணைப் போல அசையாமல் என் முன் நின்று முழுவதும் திறந்த கண்களால் என்னை நோக்கிப் பார்க்கிறார்கள். அவர்களின் விசித்திரநிலையை நான் பார்க்கும்போது, என்னால் சிரிப்பதை நிறுத்த முடியவில்லை. அவர்கள் என்னிடமிருந்து பொருட்களைக் கேட்பதால், நான் அவர்களுக்கு என் கையில் உள்ள பொருட்களைக் கொடுக்கிறேன், அவர்கள் அவற்றைத் தங்கள் மார்போடு அணைத்துக்கொண்டு, புதிதாகப் பிறந்த குழந்தையைப் போல பேணுகிறார்கள், அவர்கள் செய்கிற செயல் கொஞ்ச நேரத்துக்கு மட்டுமே நிலைக்கிறது. அவர்கள் வசிக்கும் சூழலை நான் மாற்றும் போது, அவர்கள் உடனடியாக “குழந்தையை” ஒரு பக்கமாகத் தூக்கி எறிந்துவிட்டு, தங்கள் கைகளைத் தங்கள் தலை மீது வைத்துக்கொண்டு ஓடுகிறார்கள். ஜனங்களுடைய பார்வையில், நான் நேரத்தையோ அல்லது இடத்தையோ பொருட்படுத்தாமல் ஆயத்தமாக இருக்கும் உதவியாளராக இருக்கிறேன்; கூப்பிட்டவுடனே வரும் உணவு பரிமாறுபவராக நான் இருப்பதைப்போல இருக்கிறது. எனவே, பேரழிவை எதிர்த்துப் போராடுவதற்கான எல்லையற்ற வல்லமை என்னிடம் இருப்பதைப் போல, ஜனங்கள் எப்போதும் என்னை “நோக்கிப் பார்த்திருக்கிறார்கள்”, அதனால் அவர்கள் எப்போதும் என் கரத்தைப் பிடித்து, எல்லாப் பொருட்களும் தாங்கள் ஒரு ஆளுபவரைப் பெற்றிருப்பதைக் காணும்படியாகவும், அதனால் யாரும் அவர்களை ஏமாற்றத் துணிய மாட்டார்கள் என்றும் தேசம் முழுவதும் பயணங்களில் என்னைக் கூட்டிச் செல்கிறார்கள். “புலியின் கம்பீரத்தை தனக்கானதாகப் பொய்யாய் கருதும் நரி” என்ற ஜனங்களின் தந்திரத்தை நான் நீண்ட காலமாகப் பார்த்து வருகிறேன், ஏனென்றால், அவர்கள் அனைவரும் தந்திரத்தின் மூலம் லாபம் சம்பாதிக்க விரும்பி “தங்கள் தொழிலைப் பற்றிக்கொண்டிருக்கிறார்கள்.” அவர்களின் நயவஞ்சகமான, தீங்கிழைக்கும் திட்டத்தை நான் நீண்ட காலமாகப் பார்த்து வருகிறேன், எங்கள் உறவை நான் காயப்படுத்த விரும்புவதில்லை என்பதுதான் காரணமாகும். நான் காரணமின்றி தொந்தரவு செய்வதில்லை—அதில் எந்த மதிப்போ அல்லது முக்கியத்துவமோ இல்லை. ஜனங்களின் பலவீனங்களை நான் கருத்தில் கொண்டு, நான் செய்ய வேண்டிய கிரியையை மட்டும் செய்கிறேன்; இல்லை என்றால், நான் அவர்களைச் சாம்பலாக்கி, அவர்கள் இனி ஒருபோதும் இருக்க அனுமதித்திருக்க மாட்டேன். ஆனால் நான் செய்யும் கிரியை அர்த்தமுடையதாய் இருக்கிறது, அதனால், நான் மனுஷனை இலகுவாகச் சிட்சிப்பதில்லை. இந்தக் காரணத்திற்காகவே ஜனங்கள் எப்போதும் தங்கள் மாம்சத்திற்குச் சுதந்திரமான ஆளுகையைக் கொடுத்திருக்கின்றனர். அவர்கள் என் சித்தத்தைக் கடைபிடிப்பதில்லை, ஆனால் என் நியாயாசனத்திற்கு முன் எப்போதும் என்னை முகஸ்துதி செய்தார்கள். ஜனங்கள் மிகவும் தைரியமானவர்கள்: அனைத்து “சித்திரவதைச் சாதனங்களும்” அவர்களை அச்சுறுத்தும் போது, அவர்கள் சற்றும் அசைவதில்லை. உண்மைகளுக்கு முன், அவர்கள் எந்த உண்மைகளையும் முன்வைக்க இயலாதவர்களாகவே இருக்கிறார்கள், மேலும் பிடிவாதமாக என்னை எதிர்ப்பதைத் தவிர வேறு எதையும் செய்வதில்லை. அவர்கள் அசுத்தமான அனைத்தையும் வெளியே கொண்டு வருமாறு நான் கேட்கும்போது, அவர்கள் இன்னும் இரண்டு வெறுமையான கைகளையே என்னிடம் காட்டுகிறார்கள்—மற்றவர்கள் இதை எப்படி ஓர் “உதாரணமாக” பயன்படுத்தாமல் இருப்பார்கள்? ஜனங்களின் “விசுவாசம்” மிக அதிகமாக இருப்பதால்தான் அவர்கள் “போற்றத்தக்கவர்களாய் இருக்கிறார்கள்”.

நான் பிரபஞ்சம் முழுவதும் என் கிரியையை ஆரம்பித்திருக்கிறேன்; பிரபஞ்சத்தின் ஜனங்கள் திடீரென்று விழித்துக்கொண்டு, என் கிரியையாகிய மையத்தைச் சுற்றி நகர்கிறார்கள், நான் அவர்களுக்குள் “பயணம்” செய்யும்போது, அனைவரும் சாத்தானின் அடிமைத்தனத்திலிருந்து தப்பித்து, சாத்தானின் துன்பங்களுக்கு மத்தியில் வேதனைப்படுவதில்லை. எனது நாளின் வருகையின் நிமித்தமாக, ஜனங்கள் மகிழ்ச்சியால் நிரம்பியிருக்கிறார்கள், அவர்களின் இருதயத்தில் உள்ள சோகம் மறைகிறது, ஆகாயத்தில் உள்ள சோகத்தின் மேகங்கள் காற்றில் ஆக்ஸிஜனாக மாறி அங்கு மிதக்கின்றன, மேலும் இந்த நேரத்தில், நான் மனுஷனுடன் ஒன்றாக இருப்பதன் மகிழ்ச்சியை அனுபவிக்கிறேன். மனுஷனின் செயல்கள் எனக்கு ருசிக்க ஏதாவது கொடுக்கின்றன, இதனால் நான் இனி வருத்தப்படுவதில்லை. மேலும், எனது நாளின் வருகையுடன் சேர்ந்து, ஜீவவல்லமையைக் கொண்ட பூமியின் பொருட்கள் அவற்றின் வாழ்விற்கான வேரை மீண்டும் பெறுகின்றன, பூமியில் உள்ள அனைத்து பொருட்களும் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுகின்றன, மேலும் அவைகள் என்னைத் தங்கள் வாழ்வுக்கான அடிப்படையாக எடுத்துக்கொள்கின்றன, ஏனென்றால் நான் எல்லாவற்றையும் ஜீவனுடன் பிரகாசிக்கச் செய்கிறேன், அவ்வாறே, நான் அவைகளை அமைதியாக மறைந்துபோகும்படி செய்கிறேன். இவ்வாறு, அனைத்தும் என் வாயிலிருந்து வரும் கட்டளைகளுக்காகக் காத்திருக்கின்றன, மேலும் நான் செய்வதிலும் சொல்வதிலும் பிரியமாய் இருக்கின்றன. எல்லாவற்றிற்கு மத்தியிலும், நானே மிக உயர்ந்தவர்—ஆயினும் நான் எல்லா ஜனங்கள் மத்தியிலும் வாழ்கிறேன், மேலும் நான் என் சிருஷ்டிப்பாகிய வானம் மற்றும் பூமியின் வெளிப்பாடுகளாக மனுஷனின் கிரியைகளைப் பயன்படுத்துகிறேன். ஜனங்கள் என் முன் மகத்தான துதியை செலுத்தும்போது, நான் எல்லாவற்றிலும் மேலாக உயர்ந்தவராக இருக்கிறேன், இதனால்தான் பூமியில் உள்ள பூக்கள் வெப்பமான சூரியனுக்குக் கீழே மிகவும் அழகாக வளர்கின்றன, புல் மிகவும் பசுமையாகிறது, ஆகாயத்தில் உள்ள மேகங்கள் அதிக நீலமாகத் தெரிகின்றன. என் குரலின் நிமித்தமாக, ஜனங்கள் இங்கும் இங்கும் ஓடுகிறார்கள்; இன்று என் ராஜ்யத்தில் உள்ள ஜனங்களின் முகங்கள் மகிழ்ச்சியால் நிரம்பியுள்ளன, அவர்களின் வாழ்க்கை வளர்ந்து பெருகுகிறது. நான் தெரிந்துகொண்ட அனைத்து ஜனங்கள் மத்தியிலும் நான் கிரியை செய்கிறேன், மேலும் எனது கிரியை மனுஷீக கருத்துக்களால் கறைபடுத்தப்பட அனுமதிக்க மாட்டேன், ஏனென்றால் நான் தனிப்பட்ட முறையில் எனது சொந்தக் கிரியையைச் செய்கிறேன். நான் கிரியை செய்யும்போது, வானங்களும் பூமியும் அவற்றிலுள்ள அனைத்தும் மாறி, புதுப்பிக்கப்படுகின்றன, நான் என் கிரியையை முடிக்கும்போது, மனுஷன் முழுமையாகப் புதுப்பிக்கப்படுகிறான், நான் கேட்பதினால் அவன் இனி துன்பத்தில் வாழமாட்டான், ஏனென்றால் மகிழ்ச்சியின் சத்தம் பூமி முழுவதும் கேட்கப்படுகிறது, மற்றும் நான் அவனுக்கு வழங்கும் ஆசீர்வாதங்களை மனுஷர்கள் மத்தியில் வழங்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறேன். நான் ராஜ்யத்தின் ராஜாவாக இருக்கும்போது, ஜனங்கள் எனக்குப் பயப்படுகிறார்கள், ஆனாலும், நான் மனுஷர்கள் மத்தியில் ராஜாவாக இருக்கும்போது, மனுஷர்கள் மத்தியில் வாழும்போது, ஜனங்கள் என்னில் மகிழ்ச்சியைக் காண்பதில்லை, ஏனென்றால், என்னைப் பற்றிய அவர்களின் கருத்துக்கள் மிகவும் கடுமையானவை, அகற்றுவதற்கு கடினமாக இருக்கும் அளவிற்கு, அவை மிகவும் ஆழமாகப் பதிந்துள்ளன. மனுஷனின் வெளிப்பாட்டின் காரணமாக, நான் பொருத்தமான எனது கிரியையைச் செய்கிறேன், மேலும் நான் ஆகாயத்திற்குள் உயரே எழுந்து, என் கோபத்தை மனுஷன் மீது கட்டவிழ்த்துவிடும்போது, என்னைப் பற்றிய ஜனங்களின் பல்வேறு கருத்துக்கள் உடனடியாகச் சாம்பலாக மாறும். அவர்கள் என்னைப் பற்றிய இன்னும் தங்களது பல கருத்துக்களைப் பேச வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன், ஆனால் அவர்களுக்கு ஒன்றும் இல்லை என்பது போலவும், அவர்கள் தாழ்மையானவர்கள் என்பது போலவும் ஊமையாக இருக்கிறார்கள். ஜனங்களின் எண்ணங்களில் நான் எவ்வளவு அதிகமாக ஜீவிக்கிறேனோ, அவ்வளவு அதிகமாக அவர்கள் என்னை நேசிக்க வருகிறார்கள், மேலும் நான் எவ்வளவு அதிகமாக ஜனங்களின் எண்ணங்களுக்கு வெளியே ஜீவிக்கிறேனோ, அவ்வளவு அதிகமாக அவர்கள் என்னை விட்டு விலகிச் செல்கிறார்கள், மேலும் அவர்கள் என்னைப் பற்றி அதிக கருத்துகளைக் கொண்டுள்ளனர், ஏனென்றால், நான் உலகத்தைச் சிருஷ்டித்ததிலிருந்து இன்று வரை, நான் எப்போதும் ஜனங்களின் எண்ணங்களில் ஜீவித்து வருகிறேன். இன்று நான் மனுஷர்கள் மத்தியில் வரும்போது, எல்லா ஜனங்களின் எண்ணங்களையும் நான் அகற்றிவிடுகிறேன், அதனால் ஜனங்கள் வெறுமனே மறுக்கிறார்கள்—ஆயினும் அவர்களின் கருத்துக்களைக் கையாள்வதற்கான பொருத்தமான வழிமுறைகள் என்னிடம் உள்ளன. ஜனங்கள் கவலைப்படவோ அல்லது மனக்கலக்கம் அடையவோ வேண்டாம்; நான் முழு மனிதகுலத்தையும் எனது சொந்த முறைகளால் இரட்சிப்பேன், எல்லா ஜனங்களையும் என்னை நேசிக்கச் செய்வேன், மேலும் அவர்களைப் பரலோகத்தில் உள்ள என் ஆசீர்வாதங்களை அனுபவிக்க அனுமதிப்பேன்.

ஏப்ரல் 17, 1992

முந்தைய:  அத்தியாயம் 32

அடுத்த:  அத்தியாயம் 34

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக

தேடல் பெட்டியில் தேடுவதற்கான ஒரு சொல்லை உள்ளிடவும்.

Connect with us on Messenger
உள்ளடக்கங்கள்
அமைப்புகள்
புத்தகங்கள்
தேடுக
காணொளிகள்