கிரியையும் பிரவேசித்தலும் (1)

தேவன் மீதான விசுவாசம் பற்றிய சரியான பாதையில் ஜனங்கள் நடக்கத் தொடங்கியதிலிருந்து, பல விஷயங்கள் அவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்திருக்கவில்லை. தேவனின் கிரியையைப் பற்றியும், அவர்கள் செய்ய வேண்டிய பெரும்பாலான கிரியைகள் பற்றியும் அவர்கள் இன்னும் மிகுந்த குழப்பத்தில் உள்ளனர். ஒருபுறம், அவர்களின் அனுபவத்தில் உள்ள விலகல் மற்றும் அவர்களின் பெறுவதற்கான திறனில் உள்ள வரம்புகள் ஆகியவை காரணங்களாக இருக்கின்றன; மறுபுறம், தேவனின் கிரியை இன்னும் ஜனங்களை இந்தக் கட்டத்திற்குக் கொண்டு வரவில்லை என்பதே அதற்குக் காரணமாக இருக்கிறது. ஆகையால், பெரும்பாலான ஆவிக்குரிய விஷயங்களைப் பற்றி எல்லோரும் தெளிவற்றவர்களாக இருக்கிறார்கள். நீங்கள் எதில் பிரவேசிக்க வேண்டும் என்பது பற்றி உங்களுக்குத் தெளிவாகத் தெரியவில்லை என்பது மட்டுமல்லாமல், தேவனின் கிரியையைப் பற்றி நீங்கள் இன்னும் அறியாதவர்களாகவும் இருக்கிறீர்கள். இது உங்களுக்குள் இருக்கும் குறைபாடுகளை விட அதிகமாக இருக்கிறது: இது மத உலகில் உள்ள அனைவருக்கும் பொதுவான ஒரு பெரிய குறைபாடு ஆகும். ஜனங்கள் ஏன் தேவனை அறியவில்லை என்பதற்கான விளக்கம் இங்கே உள்ளது, எனவே இந்தக் குறைபாடு அவரைத் தேடும் அனைவராலும் பகிரப்படும் பொதுவான குறைபாடாகும். ஒரு நபர் கூட ஒருபோதும் தேவனை அறிந்திருக்கவில்லை, அல்லது அவருடைய உண்மையான முகத்தைப் பார்த்ததும் இல்லை. இதன் காரணமாகவே தேவனின் கிரியை ஒரு மலையை நகர்த்துவது அல்லது சமுத்திரத்தை வடிப்பது போன்று கடினமானதாக இருக்கிறது. தேவனின் கிரியைக்காக அநேக ஜனங்கள் தங்கள் ஜீவன்களைத் தியாகம் செய்துள்ளனர்; அவருடைய கிரியையின் காரணமாக அநேக ஜனங்கள் துரத்தப்ப்பட்டிருக்கிறார்கள்; அவருடைய கிரியையின் பொருட்டு அநேக ஜனங்கள் மரணபரியந்தம் துன்பப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்; அநேக ஜனங்கள் தேவனின் மீதுள்ள அன்பின் காரணமாகக் கண்களில் கண்ணீர் ததும்ப அநியாயமாக இறந்துபோயிருக்கிறார்கள்; அநேக ஜனங்கள் கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற துன்புறுத்தல்களை சந்தித்திருக்கிறார்கள்…. இந்தத் துயரங்கள் நிறைவேறிவிட்டன—இவை அனைத்தும் மக்களுக்கு தேவனைப் பற்றிய அறிவின்மை காரணமாகத்தான் இல்லையா? தேவனை அறியாத ஒருவனால் எப்படி அவருக்கு முன்பாக வர தைரியங்கொள்ள முடியும்? தேவனை விசுவாசித்து, ஆனாலும் அவரைத் துன்புறுத்துகிற ஒருவனால் எப்படி அவருக்கு முன்பாக வர தைரியங்கொள்ள முடியும்? இவை மத உலகில் உள்ளவர்களின் போதாமைகள் மட்டுமல்ல, மாறாக அவை உங்களுக்கும் அவர்களுக்கும் பொதுவானவையாக இருக்கின்றன. ஜனங்கள் தேவனை அறியாமலேயே அவரை விசுவாசிக்கிறார்கள்; இந்த ஒரு காரணத்தினால்தான் அவர்கள் தங்கள் இருதயங்களில் தேவனை பயபக்தியுடன் போற்றுவதில்லை, அவர்களுடைய இருதயங்களில் அவருக்குப் பயப்படுவதும் இல்லை. இந்த பிரவாகத்திற்குள் அவர்கள் அவர்களாகவே கற்பனை செய்துகொள்ளும் கிரியையை வெளிப்படையாகவும், வெட்கப்படாமலும் செய்து, தங்கள் சொந்த கோரிக்கைகளுக்கும் அளவற்ற ஆசைகளுக்கும் ஏற்ப தேவனால் நியமிக்கப்பட்ட கிரியையைச் செய்கிறார்கள். அநேக ஜனங்கள் காட்டுமிராண்டித்தனமாக செயல்படுகிறார்கள், தேவனை எவ்விதத்திலும் மதிக்காமல், தங்கள் சொந்த விருப்பத்தைப் பின்பற்றுகிறார்கள். இந்த எடுத்துக்காட்டுகள் ஜனங்களின் சுயநல இருதயங்களின் சரியான வெளிப்பாடுகள் அல்லவா? இந்த எடுத்துக்காட்டுகள் ஜனங்களுக்குள் இருக்கும் அதிகப்படியான ஏமாற்றும் மனநிலையை வெளிப்படுத்துவதாக இல்லையா? ஜனங்கள் உண்மையில் மிகவும் புத்திசாலித்தனமாக இருக்கலாம், ஆனால் அவர்களின் திறமைகள் தேவனுடைய கிரியையின் இடத்தை எவ்வாறு கைப்பற்ற முடியும்? தேவனின் சுமையைக் குறித்து ஜனங்கள் உண்மையிலேயே அக்கறை காட்டக்கக்கூடும், ஆனால் அவர்களால் சுயநலமாகச் செயல்பட முடியாது. ஜனங்களின் செயல்பாடுகள் உண்மையில் தேவனுடைய செயல்பாடுகள் போன்றவையா? இதை யாராவது நூறு சதவீதம் உறுதி செய்ய முடியுமா? தேவனுக்குச் சாட்சிக் கொடுப்பதற்கு, அவருடைய மகிமையைச் சுதந்தரிப்பதற்கு (இது தேவன் ஒரு விதிவிலக்கை ஏற்படுத்தி, ஜனங்களை உயர்த்துவதாக இருக்கிறது); ஜனங்கள் எவ்வாறு தகுதியுடையவர்களாக இருக்க முடியும்? தேவனின் கிரியை இப்போதுதான் ஆரம்பமாகியிருக்கிறது, அவருடைய வார்த்தைகள் இப்போது தான் பேசத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில், ஜனங்கள் அவர்களைப் பற்றி நன்றாக உணர்கிறார்கள், ஆனால் இது வெட்கக்கேடானது அல்லவா? அவர்கள் மிகக் குறைவாகவே புரிந்துகொள்கிறார்கள். மிகவும் திறமையான கோட்பாட்டாளனால், மிகவும் நாவன்மை கொண்ட சொற்பொழிவாளனால் கூட தேவனின் பெரும் வளத்தை விவரிக்க முடியாது, எனவே உங்களால் மட்டும் எப்படி முடியும்? நீங்கள் உங்களுடைய மதிப்பை வானத்தை விட உயர்ந்ததாக அமைத்துக்கொள்ளக் கூடாது, மாறாக தேவனை நேசிக்க விரும்பும் நியாயமான மனுஷரில் எவரையும் விட நீங்கள் உங்களைத் தாழ்ந்தவராகவே பார்க்க வேண்டும். நீங்கள் பிரவேசிக்க வேண்டிய பாதை இதுதான்: மற்ற அனைவரையும் விட உங்களை நீங்கள் தாழ்ந்தவராகவே பார்க்க வேண்டும். எதற்காக நீங்களே உங்களை மிக உயர்ந்தவர்களாகப் பார்க்கிறீர்கள்? இவ்வளவு உயர்ந்த மதிப்பீட்டில் உங்களை ஏன் வைக்கிறீர்கள்? ஜீவிதத்தின் நீண்ட பயணத்தில், நீங்கள் சில துவக்க அடிகளைத்தான் எடுத்து வைத்துள்ளீர்கள். நீங்கள் பார்ப்பது எல்லாம் தேவனின் கையை மட்டும்தான், முழு தேவனையும் அல்ல. தேவனின் அதிகமான கிரியைகளைக் காணவும், நீங்கள் பிரவேசிக்க வேண்டியவற்றைக் கண்டறியவும் வேண்டும், ஏனென்றால் நீங்கள் மிகக் குறைவாகவே மாறியிருக்கிறீர்கள்.

தேவன் மனுஷனைப் பரிபூரணமாக்கி, அவனது மனநிலையை மாற்றியமைத்தவுடன், அவருடைய கிரியை ஒருபோதும் நின்றுபோவதில்லை, ஏனென்றால் மனுஷன் பல வழிகளில் குறைபாடுள்ளவனாய் இருக்கிறான், தேவனால் நிர்ணயிக்கப்பட்ட தரங்களிலிருந்து வெகு தூரத்தில் இருக்கிறான். எனவே, தேவனின் பார்வையில், நீங்கள் அவரைப் பிரியப்படுத்தும் வெகு சில அம்சங்களைச் சுமந்துகொண்டு நித்தியமாக புதிதாகப் பிறந்த குழந்தைகளாக இருப்பீர்கள் என்று சொல்லப்படலாம், ஏனென்றால் நீங்கள் தேவன் தம்முடைய கைகளில் உள்ள ஜீவன்களே தவிர வேறில்லை. ஒரு நபர் தன்னிறைவு பெற்றுவிட்டதாக, மெத்தனமாக இருந்தால் அவர்கள் தேவனால் வெறுக்கப்பட மாட்டார்களா? இன்று உங்களால் தேவனைத் திருப்திப்படுத்த முடிகிறது என்று சொல்வது உங்கள் மாம்ச சரீரத்தின் குறுகிய கண்ணோட்டத்தில் பேசுவதாகும்; நீங்கள் உண்மையிலேயே தேவனுக்கு நிகராகப் பொருத்தமாக இருந்தால், நீங்கள் என்றென்றும் அரங்கில் தோற்கடிக்கப்படுவீர்கள். மனுஷனின் மாம்சம் ஒருபோதும் ஜெயத்தை அறிந்ததில்லை. பரிசுத்த ஆவியானவரின் கிரியை மூலமாக மட்டுமே மனுஷன் மீட்கும் அம்சங்களைக் கொண்டிருப்பது சாத்தியமாகும். உண்மையில், தேவனின் சிருஷ்டிப்பில் உள்ள எண்ணற்ற விஷயங்களில், மனுஷன் தான் மிகத் தாழ்ந்தவனாக இருக்கிறான். அவன் எல்லாவற்றிற்கும் எஜமானனாக இருந்தாலும், அவற்றில் சாத்தானின் தந்திரத்திற்கு உட்படுபவன் மனுஷன் மட்டுமே, அவன் மட்டுமே சாத்தானின் சீர்கேட்டிற்கு முடிவில்லாத வழிகளில் இரையாகிறான். மனுஷன் ஒருபோதும் தன்மீது ராஜரீகத்தைக் கொண்டிருப்பதில்லை. அநேக ஜனங்கள் சாத்தானின் மோசமான இடத்தில் வாழ்கிறார்கள், அவனது பரிகாசத்திற்கு ஆளாகிறார்கள்; அவன் அவர்களை இவ்வாறு பரிகாசம் செய்கிறான், மேலும் அவர்கள் பாதி உயிரோடு இருக்கும் வரை, மனுஷ உலகில் இருக்கும் ஒவ்வொரு விவகாரத்தையும், ஒவ்வொரு கஷ்டத்தையும் தாங்கிக்கொள்கிறார்கள். அவர்களுடன் விளையாடிய பிறகு, சாத்தான் அவர்களின் விதிக்கு முற்றுப்புள்ளி வைக்கிறான். ஆகவே, ஜனங்கள் தாங்கள் ஜீவிக்கும் நாட்கள் அனைத்திலும் குழப்பத்திலேயே ஜீவிக்கிறார்கள், தேவன் அவர்களுக்காக ஆயத்தப்படுத்தி வைத்துள்ள நல்ல விஷயங்களை அவர்கள் ஒருபோதும் அனுபவிப்பதில்லை, அதற்கு மாறாக சாத்தானால் சேதமடைந்துதுண்டு துண்டாக்கப்பட்டனர். இன்று அவர்கள் மிகவும் சோர்ந்தவர்களாகவும், கவனக்குறைவானவர்களாகவும் மாறிவிட்டார்கள், தேவனின் கிரியையை கவனிக்க அவர்களுக்கு விருப்பம் இருப்பதில்லை. தேவனின் கிரியையை கவனிக்க ஜனங்களுக்கு விருப்பம் இல்லையென்றால், அவர்களின் அனுபவம் துண்டு துண்டாகவும் பரிபூரணமடையாமலும் இருக்கும்படிக்கு நிரந்தரமாக அழிந்து போகும், மேலும் அவர்களின் பிரவேசம் எப்போதும் ஒரு வெற்றிடமாக மட்டுமே இருக்கும். தேவன் உலகத்திற்கு வந்ததிலிருந்து பல ஆயிரம் ஆண்டுகளில், உயர்ந்த இலட்சியங்களைக் கொண்ட அநேக மனுஷரும் அநேக ஆண்டுகள் அவருக்காக உழைக்க அவரால் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்; ஆனால் அவருடைய கிரியையை அறிந்தவர்கள் கிட்டத்தட்ட யாருமே இல்லாதது போல வெகு சிலரே இருக்கிறார்கள். இந்த காரணத்திற்காக, எண்ணற்ற ஜனங்கள் அவருக்காகக் கிரியை செய்யும் அதே வேளையில் தேவனை எதிர்ப்பதற்கான பங்கையும் எடுத்துக்கொள்கிறார்கள், ஏனென்றால், தேவனுடைய கிரியையைச் செய்வதை விட, தேவனால் வழங்கப்பட்ட நிலையில் அவர்கள் உண்மையில் மனுஷ கிரியையைத்தான் செய்கிறார்கள். இதைக் கிரியை என்று அழைக்கலாமா? அவர்களால் எவ்வாறு பிரவேசிக்க முடியும்? மனுஷகுலம் தேவனின் கிருபையை எடுத்து அதைப் புதைத்துவிட்டது. இதன் காரணமாக, கடந்த பல தலைமுறைகளாக அவருடைய கிரியையைச் செய்பவர்களுக்கு சிறிதளவே பிரவேசம் கிடைக்கிறது. தேவனின் கிரியையை அறிவதைப் பற்றி அவர்கள் வெறுமனே பேசுவதில்லை, ஏனென்றால் அவர்கள் தேவனின் ஞானத்தை மிகக் குறைவாகவே புரிந்துகொள்கிறார்கள். தேவனுக்கு ஊழியம் செய்பவர்கள் பலர் இருந்தாலும், அவர் எவ்வளவு உயர்ந்தவர் என்பதைக் காண அவர்கள் தவறிவிட்டார்கள் என்றும், இதனால்தான் மற்றவர்கள் தங்களை வணங்குவதற்காக தங்களை தேவனாக நிலைநிறுத்திக் கொண்டார்கள் என்றும் கூறலாம்.

பல ஆண்டுகளாக தேவன் சிருஷ்டிப்புகளுக்குள் மறைந்திருக்கிறார்; மூடுபனி எனும் முக்காடிற்குப் பின்னால் இருந்து பல வசந்தகாலங்களையும் இலையுதிர்காலங்களையும் கவனித்துவந்திருக்கிறார்; மூன்றாம் வானத்திலிருந்து பலமுறை பகல்நேரங்களிலும் இரவுநேரங்களிலும் அவர் கீழ்நோக்கிப் பார்த்திருக்கிறார்; அவர் பல மாதங்களாக பல ஆண்டுகளாக மனுஷரிடையே நடந்துவந்திருக்கிறார். அவர் எல்லா மனுஷருக்கும் மேலாக உட்கார்ந்து, அமைதியாகப் பல குளிர்ச்சியான குளிர்காலங்கள் கடந்தும் காத்திருக்கிறார். ஒருபோதும் அவர் தம்மை யாருக்கும் வெளிப்படையாகக் காட்டவில்லை, எந்த சத்தமும் எழுப்பவில்லை, அவர் எவ்வித அடையாளமும் இன்றி அமைதியாகப் புறப்பட்டுச் செல்கிறார் மற்றும் அமைதியாகவே திரும்பி வருகிறார். அவருடைய உண்மையான முகத்தை யார் அறிய முடியும்? அவர் ஒருபோதும் மனுஷனிடம் பேசியிருக்கவில்லை, ஒருபோதும் மனுஷன் முன்பாகத் தோன்றியிருக்கவில்லை. தேவனால் நியமிக்கப்பட்ட கிரியையை செய்வது ஜனங்களுக்கு எவ்வளவு எளிமையாக இருக்கிறது? அவரை அறிவது எல்லாவற்றைக் காட்டிலும் மிகவும் கடினம் என்பதை அவர்கள் உணரவில்லை. இன்று தேவன் மனுஷனிடம் பேசியிருக்கிறார், ஆனால் மனுஷன் அவரை ஒருபோதும் அறிந்திருக்கவில்லை, ஏனென்றால் ஜீவிதத்தில் அவனது பிரவேசம் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாகவும் ஆழமற்றதாகவும் இருக்கிறது. அவருடைய கண்ணோட்டத்தில் பார்த்தால், ஜனங்கள் தேவனுக்கு முன்பாகத் தோன்றுவதற்கு முற்றிலும் தகுதியற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு தேவனைப் பற்றிய புரிதல் மிகக் குறைவாக இருக்கிறது, மேலும் அவரிடமிருந்து அவர்கள் வெகு தொலைவில் இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல், தேவனை விசுவாசிக்கின்ற அவர்களின் இருதயங்கள் கூட மிகவும் சிக்கலாக இருக்கின்றன, மேலும் அவர்கள் தேவனின் உருவத்தை அவர்களின் உள்ளார்ந்த இருதயங்களில் வைத்திருப்பதும் இல்லை. இதன் விளைவாக, தேவனின் கடினமான முயற்சி மற்றும் அவரது கிரியை ஆகியவை மணலுக்கு அடியில் புதைக்கப்பட்ட தங்கத் துகள்கள் போல பளிச்சிடும் வெளிச்சத்தை வெளியிட முடிவதில்லை. தேவனைப் பொறுத்தவரை, இந்த ஜனங்களின் திறமை, நோக்கங்கள் மற்றும் பார்வைகள் மிகவும் வெறுக்கத்தக்கவையாக இருக்கின்றன. பெறுவதற்கான அவர்களது திறனில் அவர்கள் தரித்திரர்களாகவும், அக்கறையின்மை என்ற அளவிற்கு உணர்வற்று, கீழ்த்தரமாகவும் சீரழிக்கப்பட்டும், அதிகப்படியான அடிமைத்தனத்துடனும், பலவீனமாகவும் மற்றும் மன உறுதியின்றியும் இருப்பதால், ஆடுமாடுகள் மற்றும் குதிரைகள் வழிநடத்தப்படுவது போல அவர்கள் வழிநடத்தப்பட வேண்டும். அவர்கள் ஆவிக்குள் பிரவேசிப்பதைப் பொறுத்தவரை, அல்லது தேவனின் கிரியைக்குள் பிரவேசிப்பதைப் பொறுத்தவரை, அவர்கள் சிறிதும் செவிசாய்ப்பதில்லை, சத்தியத்திற்காக துன்பப்படுவதற்கான சிறிதளவு உறுதிப்பாட்டையும் கொண்டிருப்பதில்லை. இந்த வகையான நபர் தேவனால் பரிபூரணமாக்கப்படுவது எளிதான காரியம் அல்ல. ஆகவே, இந்தக் கண்ணோட்டத்திலிருந்து உங்கள் பிரவேசித்தலை நீங்கள் அமைக்க வேண்டியது அவசியமானதாகும்—உங்கள் கிரியை மற்றும் உங்கள் பிரவேசித்தல் மூலம் நீங்கள் தேவனின் கிரியையை அறிந்து கொள்ளத் தொடங்குகிறீர்கள்.

முந்தைய:  தேவனை அறியாத ஜனங்கள் அனைவரும் தேவனை எதிர்க்கும் ஜனங்களாவர்

அடுத்த:  கிரியையும் பிரவேசித்தலும் (2)

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக

Connect with us on Messenger